தூத்துக்குடி, திமுக தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் தேர்வு குறித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணி பிரச்சாரக் குழு செயலாளரும், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜெஸி பொன்ராணி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மகளிரணி பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி கட்சிக்காக ஆற்றியப் பணிகள், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்களா? என்ற கேள்விகள் எழுப்பினார்.
பின்னர் பேசுகையில், இத்தொகுதியின் எம்.பி.யாக கனிமொழி பணியாற்றி வருகிறார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் மகளிரணி, மகளிர் தொண்டரணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு பொறுப்பாளராக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு அதில் பணியாற்றி வருகிறார். இதை அனைவரும் கருத்தில் கொண்டு மகளிரணியை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து சாதனை திட்டங்களையும், பலன்களையும் வீடுதோறும் மகளிரணியினர் கொண்டு சேர்க்க வேண்டும்.
மாப்பிள்ளையூரணி ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். அனைவரையும் பாகுபாடு இல்லாமல் பார்ப்பவர். இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு ஒன்றிய பகுதியில் மகளிரணியினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் கௌதம் உள்பட ஒன்றியத்திற்குட்பட்ட மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.