Thupparithal
செய்திகள்

74வது குடியரசு தின விழா; தூத்துக்குடி அருகே உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் மூவர்ண கொடி ஏற்றி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

துத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 74வது இந்திய குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை பொறியியல் பிரிவு குரூப் கேப்டன் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடி ஏற்றிவைத்து, குடியரசு தின சிறப்புரை வழங்கினார்.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஷண்மதி தலைமை தாங்கினார். நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜேஷ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மதிவண்ணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள், எனப்பலர் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, பேராசிரியை என்.வித்யா வரவேற்புரையாற்றினார். முதலாமாண்டு மாணவிகள் சரிகா மற்றும் எசுவேதாஸ்ரீ ஆகியோர் குடியரசு தின சிறப்புரை வழங்கினர். கல்லூரி தேசிய மாணவர் படை வீரர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

இறுதியாக, பேராசிரியை கோபிகா தேவி நன்றி கூறினார். 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ், ஹேமலட்சுமி  ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related posts

துாத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 24 அப்ரென்டிஸ் பணிக்கு வரும் 14ல் தேர்வு; ஐ.டி.ஐ., படித்தவர்களே மிஸ் பண்ணாதீங்க!.

Admin

தமிழ்நாடு ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு!.

Admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர்..மக்கள் நம்ப வேண்டாம்- ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த பணியாளர்கள் கூட்டாக பேட்டி…!

Admin

Leave a Comment

error: Content is protected !!