Thupparithal
செய்திகள்

அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை இலவசமாக வழங்க வேண்டும்: செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்தனர்

அம்மனுவில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் போது மிச்சமாகும் சாம்பல் கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து மீனவர்களின் தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் சாம்பல்கள் அனுப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதால் உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் தொழிலை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே நலிவுற்றிருக்கும் உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளருக்கு மீண்டும் 30% உலர் சாம்பலை இலவசமாக Allotment Order Renewal செய்து தங்கு தடையின்றி உற்பத்தியாளர்களுக்கு கிடைத்திட தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related posts

தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை – எம்பி, அமைச்சர், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!

Admin

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.26, 27ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; ஆட்சியர் தகவல்

Admin

தூத்துக்குடி அருகே ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக்& ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!