Thupparithal
அரசியல்

தூத்துக்குடி, எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகை அழிப்பு; மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.

தூத்துக்குடி வ.உ.சி. சாலை தொடர்ச்சியில் உள்ளது கிப்சன்புரம். அங்குள்ள பூங்காவின் முன்பு சுமார் 20 ஆண்டுகளாக எம்ஜிஆர் ரசிகர்களால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. அதை இன்றளவும் சிலை அமைத்த அதிமுக நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த சிலையின் அடிப்பக்கம் உள்ள பெயர் பலகையில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், அதிமுக 39 வது வட்ட கழக செயலாளருமான அப்பகுதியைச் சேர்ந்தவருமான பி.திருச்சிற்றம்பலம் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை எழுதியுள்ளார். அப்போது அவர் எழுதிய பிறகு அதனை புதிதாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு சிலர் அதனை அழித்துள்ளனர்.

இதனை அறிந்த மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் எம்ஜிஆரின் பெயர் பலகையை அழித்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது; தூத்துக்குடி மாநகரத்தில் அதிமுக நிர்வாகியாக இருந்து வருகிறேன். நான் பிறந்து வளர்ந்த இப்பகுதியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலை உள்ளது. அதனை 20 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தைச் சார்ந்த மூத்த அதிமுக நிர்வாகி சாமுவேல் அப்பதியைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்லப்பா என்பவரும் மற்றும் அன்றைய தினம் அப்பகுதியில் கட்சி நிர்வாகிகளாக பணியாற்றியவர்களும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருஉருவச் சிலையை நிறுவினர். அதற்கு நிதி உதவி செய்தவர் மூத்த அ.தி.மு.க உறுப்பினர் சாமுவேல் ஆவார்.


மேலும், அந்த சிலை இன்றளவும் அவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதில் நான் பெயர் பலகையில் நிர்வாகிகளின் பெயரை நேற்று 24.11.2022 எழுதினேன். அதனை கேள்விப்பட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகி எஸ்.ஏசாதுரை என்பவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த பெயர் பலகையை அவரது ஆதரவாளர்களைக் கொண்டு அழித்துள்ளார். அதிமுகவை சார்ந்த நிர்வாகிகளான எங்கள் பெயரை எழுதியதை அழிக்க ஓபிஎஸ் அணியினருக்கு என்ன தகுதி உள்ளது.

மேலும், கிப்சன்புரத்தை பற்றிய அவர்கள் அறிந்திராத ஒரு தகவலை நான் ஓபிஎஸ் அணியினருக்கு கூறி கொள்வதாவது, கிப்சன்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பூங்கா எங்கள் குடும்ப முன்னோர்களின் பூர்வீக நிலம். அதனை அந்த காலத்தில் எங்களது முன்னோர் ஐயா நல்லபெருமாள் பிள்ளை அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசிற்கு வழங்கினார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அந்த இடத்தின் முகப்பில் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதையும் இந்த சிலையை பராமரிக்க முழு அதிகாரமும் உண்மையான அதிமுக நிர்வாகிகளான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அரசியல் வாரிசாக திகழும் கழக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியார் வழியில் செயல்படும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்றைய தினம் மேற்படி புரட்சித்தலைவரின் சிலையை திறந்து வைத்த எஸ்‌.பி.சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடியில் பொறுப்பில் உள்ள எங்களுக்கும் மேலும் இந்த சிலையை நிறுவிய சாமுவேல் உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகளுக்கும் உள்ளதே தவிர அரசியல் சுயலாபத்திற்காக கட்சியை பிளவு படுத்த நினைக்கும் ஓபிஎஸ் போன்ற அவர் வழியில் இருக்கின்ற நிர்வாகிகள் யாருக்கும் இல்லை.

மேலும், இந்த பெயர் பலகையை அளித்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு அதிமுக நிர்வாகி திருச்சிற்றம்பலம் கூறினார்.

Related posts

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி-க்கு அமைச்சர் எம்எல்ஏ நேரில் வாழ்த்து!

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!