இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு கடந்த ஆண்டு முதல் புதிய திட்டங்களுக்கு குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம் முனைப்போடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மறுவாழ்வு முகாம்களில் வாழும் பெண்களின் திறனை சூழலை மேம்படுத்த 300 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியாகவும், சமுதாய மேம்பாட்டு நிதியாகவும் குழு ஒன்றுக்கு தலா 1,25.000 ரூபா ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர் நல வாழ் மக்களின் சுய சார்பினையும், மகளிர் மேம்பாட்டினையும் மேம்படுத்தி சில சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட மகளிர்களை ஒருங்கிணைத்து சாதனைப்பூக்கள் என்ற உணவு உற்பத்திக் குழு என்ற பெயரில் உருவாக்கி அதன் மூலம் ஒலைப்புட்டு இலங்கைத்தமிழர் பாரம்பரியம் உணவகம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி தச்சர் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.