தூத்துக்குடியில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் வைத்து சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும் மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 60 வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகள், மழை காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள், மழை காலத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களின் தேவைகள் குறித்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நிரந்தர தீர்வு, 60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டு,18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் நகர்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தவும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 24B-24H மற்றும் மாநகராட்சியின் சட்ட பிரிவுகளின் படி வார்டு குழு மற்றும் பகுதி சபா செயல்படுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2022 படி ஒவ்வொரு வார்டு பகுதியில் ஒரு நபரை வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய பின்வரும் பட்டியலில் கண்டுள்ள நபர்களிடமிருந்து உறுப்பினர் நியமன படிவம் வரப்பெற்றுள்ளது. எனவும் பகுதிசபா வார்டு பகுதிகள் அடங்கிய உறுப்பினர்கள் நியமன பட்டியல் மேயர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
கூட்டத்தில், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.