குறுக்கு வழியில் ஆலையை திறக்க பகல் கனவு காணும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்., மண்டையில் குட்டு வைத்த தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர்.!

குறுக்கு வழியில் ஆலையை திறக்க பகல் கனவு காணும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்., மண்டையில் குட்டு வைத்த தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர்.!

தூத்துக்குடி, வின்ஸ்பாட் தொழிற்சாலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கருதி இன்று போராட்டத்தை முன்னெடுத்து அதில் முழுக்க, முழுக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பதையே மந்திர கோஷமாக்கிய வழக்கறிஞர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டையில் குட்டு வைத்த தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர்.

என்ன நடந்தது.!

தூத்துக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான, 'வின்பாஸ்ட்' தொழிற்சாலை தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாநத்தம் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

ஆனால், தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்களுக்கு பணி வழங்கவில்லை என்று கூறி வழக்கறிஞர்கள் சிலர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் விவிடி சிக்னல் அருகே உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்று கூடினர். அப்போது உச்சி வெயிலில் நின்று கொண்டு பேசிய வழக்கறிஞர்கள் அவர்கள் நடத்திய போராட்டத்தின் தலைப்பையே மாற்றி ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என முழக்கமிட ஆரம்பித்தனர்..

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் இது தான் போராட்டகாரர்களின் முழு கோஷம். அவர்கள் நடத்திய போராட்டத்தினால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் மட்டுமா, தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர் பதறி போயினர். "என்ன டா இது" ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரா வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம். ஆனால் வழக்கறிஞர்கள் என்று சொல்லி கொண்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என போராடுகிறார்களே என அதிர்ச்சியில் ஆழ்ந்த வழக்கறிஞர், மதியம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர். வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.பி வாரியார், செயலாளர் செல்வின், துணைத் தலைவர் சிவா, இணைச் செயலாளர் பாலகுமார், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் இது குறித்து கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என போராடியவர்களுக்கும், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நீதிமன்ற வாயிலில் வைத்து நடத்தப்படுகின்ற போராட்டம் தான் சங்கத்தின் போராட்டம். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகள் செய்து வருகிறது வழக்கறிஞர்கள் சங்கம். எதிர்காலத்திலும் சட்ட உதவிகள் செய்யும் என்றார்கள்.

அதாவது, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி, போராட்டம் நடத்த அனுமதி கோரினர் வழக்கறிஞர்கள்., ஆனால் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பதே அவர்களின் முழு முதற் பேச்சாக இநடத்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று போராட போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தால் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காது என்று கருதி வின்ஸ்பாட் தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் அனுமதி வழங்கி போராட்டத்தையே திசை திருப்பி உள்ளனர் போராட்டக்காரர்கள்..

அதுமட்டுமல்ல, தூத்துக்குடி வின்ஸ்பாட் தொழிற்சாலையில் நான் முதல்வன் திட்டம் மூலம் ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு பணி வழங்கப்படுள்ளது. இதனை தமிழக முதல்வரே கூறியிருந்தார்.  முதல்வர் இதனை உறுதிப்படுத்திய பின்பும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் மக்களை போராட்டத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தூண்டிவிடுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் குறுக்கு வழியில் எதையாவது செய்து ஆலையை திறந்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறது. ஆனால், அது எள்ளளவும் நடைபெறாது என்பதே தூத்துக்குடி மக்கள் வைக்கும் கருத்தாகும்.