Thupparithal
செய்திகள்

இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை; ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்!.

தூத்துக்குடி மாவட்டத்தில் இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாடுகளில் இலம்பி தோல் கழலைநோய் என்பது ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சு பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உட்கொள்ளாமை, உடலின் அனைத்து பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். பாதிக்கப்பட்டமாடுகளில் இருந்தும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து புதிதாக மாடுகள் வாங்கி வருவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்கு நோய் பரவுகிறது.

இதனால் பால் உற்பத்தி குறையும், சினைபிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய நோய் அறிகுறிகள் கால்நடைகளில் தென்பட்டால் அருகில உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சிகிச்சை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

2ம் கேட் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள சந்திப்பில் கூடும் கட்டிட பணியாளர்கள் கூடாமல் இருக்க காவலர்களை பணி அமர்த்த வேண்டும்- இந்து மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுடலைமணி மனு!.

Admin

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை வழங்கப்பட்டது.

Admin

திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு; மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!