Thupparithal
செய்திகள்

ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடு!.

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நேரடி மானியங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இயங்கும் அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது; இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின்கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி அனுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நகரங்களில் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு இருப்புதொகை இல்லாத எளிய வங்கிசேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்பட்டு பொது மக்களுக்கு வங்கி சேவை அளித்து வருகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்யாதெனில்: இந்தகணக்கிற்கு இருப்புதொகை எதுவும்கிடையாது. (Zero Balance Account)
வங்கிகள் இல்லாத அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமபுரத்தில் எளியமுறையில் வங்கிசேவை அளிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு கணக்கு துவங்க ஆதார் அட்டை மற்றும் கைபேசி கொண்டுவருவது அவசியம்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிகணக்கு துவங்க அதிகப்படியாக ஒருநிமிடம் ஆகும்.
பொதுமக்கள் மாதாந்திர பணத்தை உங்கள் பகுதியிலுள்ள அஞ்சல் நிலையங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவை மூலம் மாதாந்திர பணத்தை தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் எந்த கட்டணமும் இன்றி பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த வங்கியின் IFSC Code: IPOS0000001, MICR CODE:627768004 துவங்கப்படும். அனைத்து கணக்குகளுக்கும் க்யூஆர்கார்டு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண், கைரேகை பயன்படுத்தி பணம் எடுத்திட முடியும். மேலும், கணக்கில் உள்ள கைபேசி எண் OTP மூலம் கணக்கில் இருந்து எளிய முறையில் பணம் போட எடுக்கமுடியும். பின்வரும் அனைத்து திட்டபயனாளிகளும் இந்த வங்கிகணக்கு துவங்கி பயன்பெறலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள், நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகளின் சம்பள கணக்கு,
விவசாயிகள், அரசின் PM KISAN மானியத்தை நேரடியாக பெரும் வசதி , குடும்ப அட்டைதாரர்களின் நேரடி மானியங்கள்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைபெறும்வசதி, பள்ளி கல்லூரிமாணவர்களுக்கான ஆதிதிராவிட நலவாரிய கணக்கு தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெரும்வசதி,
மீனவர்கள் மீன்பிடி தடைக்கல மானியம் பெரும்வசதி, சமூக பாதுகாப்பு திட்டபயனாளிகளின் பலன்களை பெரும்வசதி,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் ஊக்கத்தொகை பெரும்வசதி,
கர்ப்பிணி பெண்களின் கர்ப்பகால உதவித்தொகையை பெரும்வசதி,
கியாஸ் மானியங்களை நேரடியாக பெரும்வசதி, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெரும்வசதி, பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட அரசு தரும் மானியம் பெரும்வசதி, ஆதார் மூலம் அரசு தரும் மற்ற உதவிகளை பெறுவதற்கும் இந்த கணக்கை பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் அனைத்து அஞ்சல்நிலையங்களிலும் இயங்கிவரும் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கியை அனுகி மாநில அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிகணக்கு துவங்கி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

தூத்துக்குடி, கோவில்பட்டியில் முட்டையின் மீது சாந்தி ஆசனம், பத்மாசனம், செய்து அசத்திய பள்ளி மாணவி!.

Admin

தூத்துக்குடி அருகே பிஸ்கட் பாக்கெட்டினை பூச்சியுடன் பொட்டலமிட்ட அய்யங்கார் பேக்கரி மூடப்பட்டது. கடந்த 2 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கடைகள் மூடப்பட்டது: எந்தெந்த கடைகள் மூடப்பட்டது என்பது குறித்தான முழு தகவல்…

Admin

2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தேர்வு எழுதும் மையங்களுக்கு சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் நேரில் ஆய்வு.

Admin

Leave a Comment

error: Content is protected !!