Thupparithal
செய்திகள்

புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி; எட்டயபுரம், அரசு தொடக்கப் பள்ளியில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில் மவுன அஞ்சலி!.

2019 பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா தாக்குதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் இராமனூத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமையில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலையில், மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பேரணியாக மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியை இந்திரா, தன்னார்வலர் ஐயப்பன், கிளைச் செயலாளர் காளியப்பன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனர்.

Related posts

அனைத்து வீடுகளிலும் ‘பைபர் நெட் ‘ திட்டம் பி.எஸ்.என்.எல். முயற்சி!

Admin

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கட்டிட வேலை சம்பந்தமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு!.

Admin

மாவீரன் பகத்சிங் 116வது பிறந்தநாள் விழா; கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் விடுதலைப்போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்கின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!