பாஜகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – நடிகர் சரத்குமார்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, தேர்தலை முன்னிட்டு ஒற்றுமை அவசியம். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், வெற்றியை குறிக்கோளாக கொண்டு அனைவரும் ஒருமித்த எண்ணத்துடன் செயல்பட வேண்டும். உலகிலேயே பெரிய தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் கொண்டு வந்த மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு கேட்க வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தனது சாதனையாக காட்டிக் கொள்கிறது. பிரதமர் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதி திட்டங்களை அறிவிக்கிறார். பொருளாதார முன்னேற்றத்திற்காக நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டு, பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நினைவூட்டினார். தற்போது இந்தி கட்டாயம் அல்ல என்று பிரதமர் தெளிவாக அறிவித்துள்ள நிலையில், பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து களப்பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தால் உலக நாடுகள் மரியாதை காட்டுகின்றன. இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரதமருக்கு உயர்ந்த மரியாதை செலுத்துகின்றன. சமூக வலைதளமான Instagram-இல் பிரதமர் மோடியை 10 கோடி பேர் பின்தொடர்வது இதற்குச் சான்று.. ஆகவே, இதனையேல்லாம் மக்களிடம் எடுத்து கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும்..
நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டினார்.
உலக பொருளாதாரத்தில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் முதலிடத்தை நோக்கி முன்னேறும்.. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 40 சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே, கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்