தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணம் மோடி தான் - மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தூத்துக்குடியில் பேச்சு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளத்தில் ரூ.452 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய முனையத்துடன் ஜூலை 2025-ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 3,115 மீட்டர் நீளமான ஓடுபாதை, இரவு நேர விமான சேவை மற்றும் ஒரே நேரத்தில் 5 ஏர்பஸ் A321 ரக விமானங்களை நிறுத்தும் வசதியுடன் தூத்துக்குடி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் TUTICORIN என்று இருந்தது.. இதனை THOOTHUKUDI விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ராம்மோகன் நாயுடு கிஞ்சரபு மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் பேசும்போது, தூத்துக்குடி, விமான நிலையத்தால் தென் தமிழகம் மிகவும் வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறி இருக்கிறது.. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து காலணி ஆதிக்கதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று மோடி பல்வேறு வித திட்டம் கொண்டு வருகிறார். புதிய பாராளுமன்றம் கட்டி செங்கோல் வைத்து மோடி திறந்துள்ளார். தமிழகத்தின் ஆதிணங்கள் அங்கு சென்று அவர்கள் முன்னிலையில் பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராஜ்பாட் என்பதை கடமைப் பாதை என்று மாற்றி இருக்கிறார்கள். இது சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுகின்ற பாதையாக உள்ளது..
ஆங்கிலேயர்கள் வைத்தது TUTICORIN என்று இதனை தற்போது THOOTHUKUDI விமான நிலையம் என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விமான போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து என மிகப் பெரிய அளவில் பிரதமர் 12 ஆண்டுகளில் 13 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்திற்கு கொடுத்து இருக்கின்றார். தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது காரணம் இதுதான். பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்து இருக்கின்றார் என்றார்..
இந்த விழாவில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ விபின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் மு.மணிகண்டன்