“காலனித்துவ மனப்பான்மையிலிருந்து தமிழ் எழுச்சி-மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ராம்மோகன் நாயுடு கிஞ்சரபு பேச்சு.!

“காலனித்துவ மனப்பான்மையிலிருந்து தமிழ் எழுச்சி-மத்திய  விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ராம்மோகன் நாயுடு கிஞ்சரபு பேச்சு.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளத்தில் ரூ.452 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய முனையத்துடன் ஜூலை 2025-ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 3,115 மீட்டர் நீளமான ஓடுபாதை, இரவு நேர விமான சேவை மற்றும் ஒரே நேரத்தில் 5 ஏர்பஸ் A321 ரக விமானங்களை நிறுத்தும் வசதியுடன் தூத்துக்குடி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் TUTICORIN என்று இருந்தது.. இதனை THOOTHUKUDI விமான நிலையம் என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 

இதனை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் முன்னிலையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ராம்மோகன் நாயுடு கிஞ்சரபு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசும் போது, இது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ‘Tuticorin’ என்பதிலிருந்து Thoothukudi Airport’ என மாற்றுவது மூலம் காலனித்துவ காலத்தில் உருவான மனப்பான்மையிலிருந்து வெளியேறி, தமிழ் மொழி, தமிழ் பாரம்பரியம் மற்றும தமிழ் பெருமையை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சி இது..

தமிழில் ‘தூத்துக்குடி’ என்று இருந்தாலும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் ‘Tuticorin’ என்று எழுதப்பட்டு வந்தது. அந்த நிலையை மாற்றி அனைத்து மொழிகளிலும் THOOTHUKUDI Airport” என்று ஒரே பெயரில் அழைக்கப்படும்.

தூத்துக்குடி விமான நிலைய வளர்ச்சிக்காக மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக 450 கோடி செலவில் புதிய டெர்மினல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 17,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை சேவையளிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பெரிய விமான சேவையை கருத்தில் கொண்டு, முன்பு 1350 மீட்டர் இருந்த ரன்-வே 3 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது Airbus A320, Boeing மற்றும் பெரிய விமானங்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது..

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நோக்கம் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவது தான்.. "ஒரு நாட்டின் வளர்ச்சி பெயர் மாற்றம் மட்டும் மூலம் ஏற்படாது. அதற்கு மனப்பான்மை மாற்றம், தன்னம்பிக்கை மற்றும் புதிய சிந்தனை தேவை. காலனித்துவ மனப்பான்மையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே பிரதமர் மோடி கூறிய ‘பஞ்சப் பிரண்’ உறுதிமொழிகளில் ஒன்று. 

தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். அதன் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் வரலாறு உலகளவில் சிறப்பிடம் பெற்றவை. அதனை பாதுகாக்கவும், உலகளவில் உயர்த்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

கடந்த 10–12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெரிய அளவில் கட்டமைப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 2500 கோடி புதிய டெர்மினல், தூத்துக்குடியில் 4500 கோடி டெர்மினல் ஆகும்.. 

2014ஆம் ஆண்டில் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 ஆயிரம் பயணிகள் இருந்த நிலையில், தற்போது அது 2 லட்சம் பயணிகளாக உயர்ந்துள்ளது.. விரைவில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு Airbus விமான சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

துறைமுகம், மின்சாரத் துறை, தொழில்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி காரணமாக இது எதிர்காலத்தில் முக்கிய முதலீட்டு மையமாக உருவாகும். 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது அது 166 விமான நிலையங்களாக உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2047க்குள் 350 விமான நிலையங்கள் உருவாக்கும் இலக்கு உள்ளது..

மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்...