திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்பி..?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு கனிமொழி எம்பியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் நீங்கள் போட்டியிட உள்ளீர்களா என்ற கேள்விக்கு? அவர் தனக்கு தொண்டை சரியில்லை என்று கும்பிட்டு விட்டு சிரித்தபடி காரில் ஏறினார்..
அதை தொடர்ந்து விடாமல் அவரிடம் கேட்டபோது ஆம் என்று சிரித்தபடி தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்..
ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கனிமொழி எம்பி போட்டியிடுவார் என்று தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில் கனிமொழி எம்பி இன்று சிரித்தபடி தலையாட்டியது பேசு பொருளாக மாறி உள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்