Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் புதிதாக மூன்று வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா; ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு வேலூரில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 புதிய வகுப்பறைகள் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்காடு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமை வகித்தார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா வரவேற்புரையாற்றினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பொறியாளர் தளவாய், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, மரிய ஜெயஷீலா, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செல்வி, மரிய ஜோஸ்பின், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் உட்பட அரசு துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவியர்கள் கையில் பூங்கொத்துடன் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related posts

பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: தூத்துக்குடி அருகே வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!

Admin

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய தேர்வில் வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி!.

Admin

தமிழக முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்

Admin

Leave a Comment

error: Content is protected !!