Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா; தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது…. அனைத்து அரசியல் கட்சியினர் உள்பட பலர் வாழ்த்து…!

தூத்துக்குடி, பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் தேர்வு கடந்த 4ம் தேதி தேர்தல் அதிகாாிகளான சரவணன், சரவணபெருமாள், கார்த்திகேயன், டேவிட்ராஜா, ஜெயராம், பாலகுமாா், ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது… அதில் தலைவராக, சண்முகசுந்தரம், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக ராஜு, துணைத்தலைவராக சிதம்பரம், இணைச்செயலாளராக சதீஷ்குமாா், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனா்…

இந்நிலையில், அதன் பதவியேற்பு விழா பிரஸ்கிளப் அலுவலகத்தில் புதன்கிழமையன்று 11.09.2024 நேற்று இரவு நடைபெற்றது.. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்… இதில், சிறப்பு விருந்தினராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்…

விழாவில், முன்னாள் தலைவர் காதா்மைதீன், செயலாளர் அண்ணாதுரை, முக்கிய பிரமுகா்களான, பாஜக மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ்கனி, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்,

இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வேல்ராஜ், அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லாவிக்னேஷ், மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், வட்டச்செயலாளர் சொக்கலிங்கம், தேமுதிக மாவட்ட பொருளாளா் விஜயன், வீரபாண்டிய கட்டபொம்மன் பன்பாட்டுக்கழக தலைவர் முருகபூபதி

செயலாளர் செந்தில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவி ஜெயஜோதி, இந்துமுன்னனி நிர்வாகிகள் சிவலிங்கம், சிபு, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், உள்பட பலர் நேரில் வந்து வாழ்த்துக்களை கூறினர்.. மேலும், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுத்துறை, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தொலை பேசி மூலம் வாழ்த்துகளை தொிவித்தனர்…

மேலும், பிரஸ்கிளப் மூத்த உறுப்பினர்கள் அருண், ஆத்திமுத்து, லெட்சுமணன், பிரஸ் கிளப் உறுப்பினர்கள், மாாிராஜா, பாலகிருஷ்ணன், அகமதுஜான், முரளி, இசக்கிராஜா, குமாா், இருதயராஜ், கண்ணன், ராஜன், செந்தில்முருகன், மாணிக்கம், ஜெகதீஷ்வரன்

அறிவழகன், ரமேஷ்கண்ணன், அருள்ராஜ், நீதிராஜன், நடராஜன், கார்த்திக்கேயன், செய்யது அலி சித்திக், சூா்யா, சேகா், ரமேஷ், மணிகண்டன் உள்பட பலரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்…

Related posts

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கட்டிட வேலை சம்பந்தமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு!.

Admin

சமூகப் பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் என்.சி. ஜான்&சன்ஸ் நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கல்.

Admin

தூத்துக்குடியில் எல்பிஜி முனைய சேமிப்பு திறனளவை 30,000 மெட்ரிக் டன்கள் அதிகரிப்பு செய்து இன்று தொடங்கப்பட்டது.

Admin

Leave a Comment

error: Content is protected !!