Thupparithal
செய்திகள்

“சாமியே சரணம் ஐயப்பா” தூத்துக்குடி ஐயப்ப பூஜையில் பாடகி இசைவாணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விண்ணை முழங்க ஐயப்ப பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை..,

கானா பாடகி இசைவாணி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2019ம் ஆண்டு ”I am sorry ayyappa” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும், இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடி வந்துள்ளார்.

இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானதைத் தொடர்ந்து சர்ச்சையாகி இந்து முன்னணி, பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ஓர் ஐயப்ப பக்தர் வீட்டில் ஐயப்பன் பூஜை நடைபெற்றது. அப்போது பூஜைக்கு நடுவே திடீரென ஐயப்ப பக்தரும், இந்து முன்னணி மாவட்டச் செயலாளருமான ராகவேந்திரா எழுந்து பேச ஆரம்பித்தார்..

அப்போது நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் முன்னிலையில் அவர் பேசும் போது, நம் சபரிமலை ஐயப்பனை “ஐ அம் சாரி ஐயப்பா” என மிகவும் தரக்குறைவாக உச்சரித்து பாடகி இசைவாணி பாடியது நம் மனம் புண்படய செய்துள்ளது.. இதுகுறித்து பாடகி இசைவானி மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஐயப்ப பக்தர்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே ஐயப்ப பக்தர்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐயப்பனிடம் பாடகி இசைவாணி மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயப்பா என கூட்டு சரணம் ஒலிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.. அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் “சாமியே சரணம் ஐயப்பா” என்ற கூட்டுச் சரணத்தை விண்ணை முழங்க ஒலித்தனர்..

மேலும், பாடகி இசைவாணிக்கு எதிராக இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் கண்டன குரல்களை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது..

Related posts

திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் கடும் உயர்வு: போராடிய இந்து முன்னணி, பக்தர்கள் மீது தாக்குதல்: பாஜக மாவட்ட தலைவர் கடும் கண்டனம்…!

Admin

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சங்க தலைவராக எஸ்டிஎஸ் ஞானராஜ் பொறுப்பேற்றார்.

Admin

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.

Admin

Leave a Comment

error: Content is protected !!