Thupparithal
க்ரைம்

சாதியை சொல்லி திட்டிய தூத்துக்குடி கூட்டுறவு சங்க அதிகாரி; 5 மாதங்களாக வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்த போலீசாருக்கு சென்னையில் இருந்து வந்த உத்தரவு…நடந்தது என்ன…!

தூத்துக்குடி, அண்ணா நகர் 12வது தெரு மங்களபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (49), இவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் தலைவராக பணியாற்றி வந்தார்.. இந்நிலையில், 13.10.2023 அன்று நடந்த சிறப்பு மகாசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கூட்டுறவு துறை ஆய்வாளர் தனலட்சுமி அங்கு சங்கர் கணேசை ஊனத்தை சொல்லியும், சாதியை சொல்லியும், திட்டியுள்ளார்..

இந்த சம்பவம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் புகார் அளிக்க சென்றபோது அந்த அலுவலக கண்காணிப்பாளர் ஜோ பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம் என்றும், காவல்துறையிலும் புகார் அளிக்க வேண்டாம் என்றும் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் தூத்துக்குடி அவர்களிடம் புகார் அளிக்க அனுமதித்துள்ளார்.. அதன் பெயரில் 13.10.2023 அன்று தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அவரிடம் புகார் அளித்துள்ளார்..

மேலும், 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் தனியாக தனலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.. ஆனால் சுமார் ஐந்து மாதங்கள் கடந்தும் தனலட்சுமி மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் தாழ்த்தப்பட்ட மட்டும் பழங்குடி ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளார்.. அதன் பெயரில் போலீசார் உரிய விசாரணை நடத்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.. இதை தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு அதிகாரி தனலட்சுமி
மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சங்கர் கணேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலையில் (0.1020) 2018 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம்வரை 5 ஆண்டுகளாக மேற்படி கூட்டுறவு பண்டக சாலையில் தலைவர் பொறுப்பு வகித்து வந்தேன். அதன்பின்பு பதவிகாலம் நிறைவு பெற்ற நிலையில், அதன் பின்னர் தேர்தல் நடைபெறாததால் பொறுப்பாளராக தனலெட்சுமி செயலாட்சியராக செயல்பட்டு வருகிறார். நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் ஆவேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்து காரணமாக எனது இடது கை மணிக்கட்டு தூண்டாகி இடது கை ஊனமாகிவிட்டது.. நான் தலைவராக இருந்த போது அடிக்கடி தனலெட்சுமி கூட்டுறவு பண்டகசாலைக்கு சுமார் மாதம் ஒருமுறை கண்காணிக்க வருவார்.. எனவே என்னை பற்றியும் நான் என்ன சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதை பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். இந்நிலையில் என் மீது பலமுறை எனது சமுதாய பெயரான (SC) எனது மனது புண்படும்படி பலமுறை பேசியுள்ளார்.

இது குறித்து, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். துணை பதிவாளர் அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிலையில், 13.10.2023 ம் தேதி சிறப்பு மகாசபை கூட்டமானது, தூத்துக்குடி சிதம்பரநகர் கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்றது… அப்போது, உறுப்பினர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தபோது செயல் ஆட்சியர் தனலெட்சுமி என்னை பற்றி நீ துணை பதிவாளர் அவர்களிடம் புகார் சொல்லும் அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என பேசி மேலும் என்ன பத்தி ஏதாவது கம்பௌயன்ட் சொன்னா என் கணவர் உதவியுடன் உன்னைக் கொலை செய்து விடுவேன்…. கீழ் சாதி பயலே உனக்கே இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் என் விஷயத்தில் தலையிட்டா காலி பன்னிருவேன் என பல பேர் முன்னாடி பேசியதால் எனக்கு அவமானமாகிவிட்டது…. என்னை சாதிபெயரை சொல்லியும் எனது ஊனத்தை கேலி செய்தும் அசிங்கமாக ஏசி கொலைமிரட்டல் விடுத்த செயலாட்சியர் தனெலட்சுமி மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டு நான் சங்க உறுப்பினர்களிடம் கலந்து பேசி தூத்துக்குடி சரக சங்ககளின் துனை பதிவாளர் அவர்களிடம் 13.10.2023 ம் அன்றய தேதியிலேயே புகார் மனு கொடுத்தேன். என்னுடன் இருந்த உறுப்பினர்களும் புகார் மனு கொடுத்தார்கள்.. பின்னர் 5 மாதங்கள் ஆகியும் தனலெட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

பின்னர் 28.05.2024 ம் தேதி சென்னை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஆணையத்திற்கு புகார் அளித்தேன். அந்த புகாரின் பெயரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் 02.09.2024 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது… ஆனால், தனலட்சுமியை விசாரிப்பதாக கூறுகின்றார்கள்.. ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை…ஆகவே, என்னை சாதிபெயரை சொல்லி அசிங்கமாக திட்டி எனது ஊனத்தை கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்த செயலாட்சியர் தனலெட்சுமி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்..

Related posts

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.25கோடி மோசடி வழக்கு: பெண் துணைச் செயலா் கைது.

Admin

தூத்துக்குடியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு!

Admin

தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை: பயங்கரம்!

Admin

Leave a Comment

error: Content is protected !!