தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக விகே சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார்.. அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், அரசியல் சூழ்நிலை எப்போதும் போல தான் உள்ளது.. புதிய கட்சிகள் தொடங்கியவர்கள் பற்றி 2026ல் தான் தெரியும்.
திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தல் வரப்போகிறது ஆகவே, 2026 தேர்தலுக்காக பயணத்தை தொடங்கி இருப்பார்கள்.. அரசு அமைந்து நான்கு வருடமாகி உள்ளது.. மக்களுக்கு செய்ய வேண்டியது எதுவும் செய்யவில்லை.. ஆனால், தேர்தல் வேலைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.. மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்..
தமிழகம் முழுவதும் கொலைகள் அதிகமாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்., பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் போக முடியவில்லை.. அதுதான் தற்போதைய சூழல்., ஆனால் அவர்கள் ஆட்சியில் ரொம்ப நன்றாக செய்கின்ற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றார்கள்.. தமிழ்நாடு மக்கள் எந்த அளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பதை இந்த நிமிடம் வரைக்கும் பார்த்து கொண்டு இருக்கின்றோம்.இது 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்..