Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில், வரும் 13-ந் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டி தனியார் கல்லுரியில் நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து சதுரங்க வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான சதுரங்க போட்டியை காமராஜ் கல்லூரியில் வருகிற 13-ந் தேதி நடத்துகிறது. இதில் ராபிட் எனப்படும் விரைவுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் பங்குபெறலாம்.

போட்டிகள் 9 வயதுக்கு உட்பட்டோர், 11 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளாகப் பள்ளி மாணவர், மாணவியருக்கும் மற்றும் பொதுப்பிரிவாக அனைவருக்கும் என 5 பிரிவுகளாக நடைபெற இருக்கிறது. வருகிற 13-ந் தேதி காலை 9.30 மணிக்குப் போட்டிகள் தொடங்குகிறது. மாணவர், மாணவியர் பிரிவில் பங்கு பெறும் அனைவரும் வயதுக்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்போட்டியில், பங்கேற்க நுழைவுக் கட்டணம் செலுத்திப் பெயரைப் பதிவு செய்வதற்கு கடைசிநாள் வருகிற 11-ந் தேதி ஆகும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். நுழைவுக் கட்டணத்தை www.easypaychess.com மற்றும் signinchess.com ஆகிய இணையத்தளங்களில் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 9865830030, 9894542121 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினம்; தமிழக கம்மாளர் முன்னணி சார்பில் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை!.

Admin

தூத்துக்குடி தி.மு.க கவுன்சிலருக்கு உலக மனித சமாதான பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது..!

Admin

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நின்று கொண்டிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை..

Admin

Leave a Comment

error: Content is protected !!