தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டது… பழைய மாநகராட்சி அருகே உள்ள பெரிய காட்டன் ரோட்டில் புதியதாக அமைந்துள்ள உள்விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்…
பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், புயல் வரக்கூடிய அபாயம் இருந்த காரணத்தினால் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு பகுதி அருகே சென்று விட்டனர்.. ஆகவே மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.. அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி இருக்கிறேன்.. விரைவிலேயே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து சேரக்கூடிய அளவில் ஒன்றிய அரசு உதவிகள் செய்து மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறேன்…
மேலும், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் எடுத்துக்கொண்டமானால் அங்கே இருக்கக்கூடிய மீனவ அமைப்புகள் நம்முடைய மீனவர்களிடம் தொடர்ந்து பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும்.. அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழ்நிலையில் தான் இருக்கிறது. அதை மறுபடியும் தொடங்கினாலே இலங்கைக்கும் நமக்கும் இருக்கக்கூடிய அந்தப் பிரச்னையும் ஒரு தீர்வை காண முடியும்.. ஆனால் ஒவ்வொரு இடத்திலேயும் மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவது படகுகளைப் பிடித்துக் கொள்வது தொடர் கதையாக மாறியுள்ளது.. ஆகவே இதற்கு நிரந்தர தீர்வு ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார்.