தூத்துக்குடி, அம்பேத்கர் நகரில் இருந்து சோட்டையன் தோப்பு செல்லும் வழியில் சேதுபாதை ரோட்டில் அமைந்துள்ள, சங்கரப்பேரி ராமநாதபுரம் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1995ம் ஆண்டு மொத்தம் 383 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 198 வீடுகள் கட்டப்பட்டு, துப்புரவு பணியாளர்கள், பொதுப்பணி துறை மற்றும் காவல்துறை ஊழியர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். 2015 சுமார் 20 ஆண்டுகள் கழித்து அந்த கட்டிடங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவை என்று நிர்மாணிக்கப்பட்டு அங்கு இருந்தவர்கள் அனைவரும் காலி செய்து வெளியேறினார்கள்.
தற்போது வரை சுமார் 10 ஆண்டு காலம் அந்த கட்டிடங்கள் பாலடைந்து சமூக விரோதி கூடாரமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை பெருவெள்ளம் வந்த பொது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவே இது சம்பந்தமான கோரிக்கையை அப்பகுதி மக்கள் வலியுறுத்தினார்கள் ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் இல்லை. பல விதமான சமூக விரோத பிரச்சனைகளுக்கு இந்த இடம் அடைக்கலம் அளித்து வருவதால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் போர்கால அடிப்படையில் அந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் வசந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்..