மைசூரில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடிக்கு முகவரி இல்லாமல் வந்த மூன்று பார்சல்கள்....நடந்தது என்ன..!

Jan 3, 2025 - 19:48
Jan 3, 2025 - 19:48
 0
மைசூரில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடிக்கு முகவரி இல்லாமல் வந்த மூன்று பார்சல்கள்....நடந்தது என்ன..!

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு பார்சல் மூலம் கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார்1, லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 160 கிலோ தடை செய்யப்பட்ட 12 பண்டல்களில் இருந்த குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்...,

தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு தினசரி மாலை 5:15 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை மைசூர் சந்திப்பிற்கு காலை 10:20 மணிக்கு சென்றடையும்.. அதேபோல், மைசூரில் இருந்து தினசரி மாலை 5:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்..

இதேபோன்று, மைசூரிலிருந்து நேற்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மைசூர் எக்ஸ்பிரஸ் வந்தது.. இந்த ரயிலில் வந்த பார்சல்கள் மதியத்திற்குள் எடுக்கப்பட வேண்டும்.. ஆனால், மூன்று பார்சல்கள் எடுக்கப்படாமல் இருந்தது.. அதில் முகவரியும் இல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் காவல்துறை மற்றும் இருப்பு பாதை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து இன்று அந்த பார்சலை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பார்சலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 160 கிலோ எடை கொண்ட ஒரு லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்காளான குட்கா இருப்பது தெரிய வந்தது..

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து அசோக் என்ற நபர் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த மனோஜ் மற்றும் அருண் ஆகியோருக்கு அனுப்பியது தெரிய வந்தது. முகவரி இல்லாமல் அனுப்பியதை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 160 கிலோ புகையிலை பொருட்கள் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறையினரும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow