பனைத் தொழில் செய்பவர்களுக்கு (கள் இறக்குபவர்களுக்கு) அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்- தமிழ்நாடு பனை பொருள் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி.!

Jan 20, 2025 - 14:29
 0
பனைத் தொழில் செய்பவர்களுக்கு (கள் இறக்குபவர்களுக்கு) அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்- தமிழ்நாடு பனை பொருள் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி.!

பனைத் தொழில் செய்பவர்களுக்கு (கள் இறக்குபவர்களுக்கு) அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும், அபராதம் குறைக்க வேண்டும்-தமிழ்நாடு பனை பொருள் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்..

சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு பனை பொருள் வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், பனை தொழிலாளர்களை காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு இதற்கென்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து 15,000 உறுப்பினர்களை சேர்த்து இருக்கின்றோம். 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தபோது கடுமையான சட்டம் விதித்தார்கள். அது, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பனை தொழிலார்களுக்கு (கள் இறக்குபவர்கள்) பொருந்தாது. ஆகவே, பனைத் தொழில் செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்தால் இந்த தொழிலை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை வருகிறது. ஆகவே, அரசு சட்டம் திருத்தம் செய்ய வேண்டும், அபராதம் குறைக்க வேண்டும். இதனை அரசு கவனத்திற்கு சென்று கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் 10 கோடி பனை மரம் இருந்த நிலையில் தற்போது 5 கோடி பனை மரம் தான் உள்ளது. பனை மரங்களை வளர்த்தால் கடல் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மீனவர்களுக்கு மழைக்காலங்களில் அரசு உதவி செய்வது போல பனை தொழிலாளர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கழகத்தினர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக வேட்பாளர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow