நிலத்தகராவில் அரிவாளால் வெட்ட பாய்ந்த காட்சி. போலீசார் விசாரணை..!

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் நில தகராறு தொடர்பாக ஒருவரை அரிவாளால் வெட்ட பாய்ந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள மெஞ்ஞானபுரம் அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வருகிறது. நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த செல்வராஜ் தாமரைக்கண்ணன் என்பவரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தாமரைக்கண்ணன் வீட்டின் முன்புள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக வரும் நிலையில், இதுகுறித்து தாமரைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






