மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக.!

 0
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக.!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதி பொது மக்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் வீடு வழங்கப்பட்டது. இதனை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் மிகவும் பாதிப்படைந்தது. இதில் ஏக்கர் கணக்கான விவசாய நிலங்கள்,  வீடுகள், கால்நடைகளான ஆடு, மாடுகளை இழந்து மக்கள் பரிதவித்தனர். அப்போது மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது.  

இந்த நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் முயற்சியில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதியதாக 7 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியானது இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கால்வாய், செம்பூர், நாணல் காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இதில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். அதுமட்டுமல்ல, பயனாளிகளுக்கு பசுமாடும் வழங்கப்பட்டது. மேலும் 100 நபர்களுக்கு மேல் செல்வமகள் சேமிப்பு திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தையல் மிஷின் வழங்கினார்கள். அதேபோல் நேபாளில் நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வால், கேடயமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அணிப்பிரிவு நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.